நடிகர் கார்த்தியின் 27ஆவது திரைப்படமான "மெய்யழகன்" திரைப்படத்தை சூர்யா - ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2D Entertainment தயாரித்துள்ளது.இந்தத் திரைப்படத்தை "96" திரைப்பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கியுள்ளார்.
இப்படம் செப்டம்பர் 27ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
96 திரைப்படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இந்தப் படத்திற்கும் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் பாடல்கள் சில வாரங்களுக்கு முன் வெளியாகின.
இப்படத்தில் முக்கியமான இரு பாடல்களை நடிகர் கமல்ஹாசன் பாடியுள்ளார்.'நான் போகிறேன்' மற்றும் 'யாரோ இவன் யாரோ' எனத் தொடங்கும் பாடல்களே அவையாகும்.
இது ஒரு அழகான உணர்வுமிக்க திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை படத்தின் Teaser தற்பொழுது வெளியாகியுள்ளது. Teaser இல், கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி இடையே உள்ள உறவை மையப்படுத்தியே காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இத்திரைப்படம் எவ்வாறான கதைக்களத்துடன் வெளியாகும் என்ற எதிர்ப்பார்ப்பு இரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது.