கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகிய உறுமீன் திரைப்படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகியிருந்த இவர் அதிகளவான தமிழ்த் திரைப்படங்களைத் தயாரித்துள்ளார்.
மரகத நாணயம், இரவுக்கு ஆயிரம் கண்கள், ராட்சசன், ஓ மை கடவுளே, bachelor, மிரள் மற்றும் கள்வன் உள்ளிட்ட திரைப்படங்களை இவர் தயாரித்துள்ளார். இதில் மரகத நாணயம், ராட்சசன், ஓ மை கடவுளே மற்றும் bachelor ஆகிய திரைப்படங்கள் மாபெரும் வரவேற்பினையும் வெற்றியினையும் பெற்றிருந்தன.
அவர் தயாரித்த திரைப்படங்களில் அதிகமானவை இளம் இயக்குநர்களினால் இயக்கப்பட்டன என்பது விசேடமான அம்சமாக கருதப்படுவதுடன், இளம் திறமையாளர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு வாய்ப்பளித்து, அதன் மூலமாக பல இளையவர்களை இவர் சினிமாவில் அறிமுகம் செய்துள்ளார்.
இவ்வாறான நிலையில் இவர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் அவரின் இறுதிச்சடங்குகள் இன்று மாலை 4.30 மணிக்கு சென்னை பெருங்குளத்தூரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்