Sooriyan Gossip - வெண்கலப் பதக்கத்தை வென்ற நெத்மி நாடு திரும்பினார்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
61 Views
ஸ்பெய்ன் தேசத்தின் பொன்டிவேட்ரா அரங்கில் நடைபெற்ற 20 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலக மல்யுத்த சம்பியன்ஷிப் போட்டியில் 53 கிலோ கிராம் எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இலங்கையின் நெத்மி அஹின்சா பெர்னாண்டோ இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளார். பேர்மிங்ஹாம் 2022 பொதுநலவாய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான 57 கிலோ கிராம் எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற நெத்மி, உலக மல்யுத்த சம்பியன்ஷிப்பில் 53 கிலோ கிராம் எடைப் பிரிவில் நடுநிலையாளர் மிக்கிட்சிச் என்பவரை 6 - 2 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிகொண்டு வெண்கலப் பதக்கத்தை தனதாக்கி வரலாறு படைத்தார்.
அரை இறுதியில் தோல்வியடைந்து மூன்றாம் இடத்தைத் தீர்மானிக்கும் போட்டியில் பங்குபற்றிய நெத்மி, வெண்கலப் பதக்கத்தை வென்று இரண்டு வருட இடைவெளியில் தனது இரண்டாவது சர்வதேச பதக்கத்தை வென்றெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.