அமெரிக்காவின் கொலராடோ போல்டர் பல்கலைக்கழகம் , தேசிய தரநிலை மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றின் விஞ்ஞானிகள் இணைந்து இதனை உருவாக்கியுள்ளனர்.
அணுவின் உட்கருவில் இருந்து வரும் சமிக்ஞைகள் மூலம் இந்த கடிகாரம் இயங்குகிறது. இந்த அணுக்கரு கடிகாரம் சர்வதேச நேரத்தை அதிகாரபூர்வமாக வெளிப்படுத்தும். தற்போதைய கடிகாரங்களை விட அதிக துல்லியத்துடன் நேரத்தை வெளிப்படுத்துகின்றது.
எதிர்காலத்தில் அணு கடிகாரங்களுக்கு மாற்றாக, அணுக்கரு கடிகாரங்கள் வரக்கூடும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
GPS அமைப்புகள் அதிக துல்லியத்துடன் செயற்படுவதற்கும், இணைய வேகத்தை அதிகரிப்பதற்கும், Digital தகவல் அமைப்புகளின் பாதுகாப்பு மற்றும் அறிவியல் ஆராய்ச்சிக்கும் குறித்த கடிகாரம் முக்கியமானதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.