தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் திரைப்படம் வெளிவந்தால் கதைக்களம் எந்த அளவிற்கு புதிதாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதை விட தங்களுக்குப் பிடித்த நடிகர்களின் திரைப்படம் எவ்வளவு வசூல் செய்கிறது என்று பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள் தமிழ் சினிமா இரசிகர்கள்.
அந்த வகையில் சமீபத்தில் வெளியாகிய தளபதி விஜய்யின் GOAT திரைப்படம், வெளிவந்த நாள் முதல் இன்று வரை திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் இதுவரை வெளியாகிய தமிழ் திரைப்படங்கள், உலகளாவிய ரீதியில் முதல் நாளில் இந்திய மதிப்பில் எத்தனை கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது என்ற விபரம் வெளியாகியுள்ளது.
அதில் முதல் 10 திரைப்படங்களின் விபரம் இதோ,
லியோ -148 கோடி இந்திய ரூபாய்கள், GOAT -126 கோடி இந்திய ரூபாய்கள், 2.0 -100 கோடி இந்திய ரூபாய்கள், பொன்னியின் செல்வன் -80 கோடி இந்திய ரூபாய்கள், பீஸ்ட் -72 கோடி இந்திய ரூபாய்கள், ஜெயிலர் -70 கோடி இந்திய ரூபாய்கள், சர்கார் -69 கோடி இந்திய ரூபாய்கள், விக்ரம் -66 கோடி இந்திய ரூபாய்கள், பிகில் -55 கோடி இந்திய ரூபாய்கள், வலிமை -50 கோடி இந்திய ரூபாய்கள்.
இதன் அடிப்படையில் தளபதி விஜய்யின் திரைப்படங்கள் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்தமாக 5 திரைப்படங்கள் இடம்பெற்று சாதனை படைத்துள்ளது.
இதன் மூலமாக தமிழ் சினிமாவின் வசூல் மன்னன் தளபதி விஜய் தான் என்று அவரது இரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.