முட்டை ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாகக் கருதப்படுகிறது. முட்டையில் அதிகளவான ஊட்டச்சத்துக்கள் விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.
முட்டை சாப்பிடுவதால் நன்மைகள் மற்றும் தீமைகள் இரண்டையும் ஏற்படுத்தும். முதலில் அதன் பலன்களைப் பார்ப்போம்.
முட்டை அதிகளவான புரதத்தை வழங்குகிறது, இது தசைகளின் வளர்ச்சி மற்றும் பராமரிப்புக்கு அவசியம்.
முட்டையில் கந்தகம் அதிகம் இருப்பதால் இது முடி மற்றும் நகங்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுகிறது.
தினமும் முட்டை சாப்பிடுவதால் கொலஸ்ட்ரோல் அளவை அதிகரிக்கும். இதனால் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
முட்டையில் அதிக கலோரிகள் இருப்பதால், அவற்றை அதிகமாக உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் எடை அதிகரிக்க வழிவகுக்கும்.
முட்டையானது, உடலுக்குள் அதிகமாக உள்ளே செல்லும்போது உடலிற்கு நிறைய தீமைகளையும் பக்க விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும்.
ஆகவே, நாம் ஒரு நாளைக்கு 2 முட்டைகளுக்கு மேல் உண்ணுவதை தவிர்ப்பது நல்லது.