55 வயதான பெண்மணி ஒருவர் தினமும் இரவு 01:30 வரை முச்சக்கர வண்டி ஓட்டுநராக கடமையாற்றுவதாகவும் தான் இவ்வளவு கடினமான உழைப்பினை தனது மகனுக்கு வழங்கியபோதிலும் வீட்டில் தனது மகனினால் பல சிக்கல்களை எதிர்கொள்வதாகவும் இவர் கூறுகின்றார்.
25 வயதான தனது மகன் பொருளாதார ரீதியாக தனக்கு ஆதரவு தரவில்லை என்றும் தன்னை அவமரியாதை செய்வதாகவும் பணத்திற்காக அடிக்கடி தன்னுடன் சண்டையிடுவதாகவும் இவர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவரின் முச்சக்கர வண்டியில் பயணித்த நபர் ஒருவரினால் இந்த விடயங்கள் கண்டறியப்பட்டு அவை சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
தனது மகனுக்கு 2 வயதாக இருந்த சந்தர்ப்பத்தில் தனது கணவன் இறந்ததாகவும் தனது மகனுக்காக வேண்டியே தான் மறுமணம் செய்துகொள்ளவில்லையென்றும் யாசகம் பெறுவதற்குப் பதிலாக, கடினமாக உழைப்பதன் காரணமாக மரியாதையுடன் இருப்பதாகவும் கூறும் இந்தத் தாய்க்கு பலரும் தங்கள் அனுதாபத்தினைத் தெரிவித்து வருவதுடன் இவரது மகனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.