தளபதி விஜய், Top Star பிரஷாந்த்,பிரபுதேவா,சினேகா, லைலா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த GOAT திரைப்படத்தின் வசூல், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இத்திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியதால் படத்தின் மீது இரசிகர்கள் அதீத எதிர்பார்ப்பை வைத்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் வெளியாகிய Goat திரைப்படத்தின் பாடல்கள் இரசிகர்களைக் கவர்ந்த வண்ணம் இருந்தது.
இந்த நிலையில் Goat திரைப்படம் வெளியாகிய முதல் நாளில் இருந்தே மக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது. அத்துடன் வசூல் ரீதியாகவும் Goat திரைப்படம் சாதனை படைத்துள்ளது.
இதுவரை Goat திரைப்படம் உலகளவில் 275 கோடி இந்திய ரூபாய்களுக்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.