இவர் நடிப்பில் வெளிவந்த முதல் படமான "ஜெயம்" திரைப்படம் இவருக்கு Block Buster படமாக அமைந்தது.
அதற்குப் பின்னர் எம்.குமரன் Son Of மகாலட்சுமி, தாஸ், மழை, உனக்கும் எனக்கும், தீபாவளி, சந்தோஷ் சுப்ரமணியம், தாம் தூம், பேராண்மை என தொடர்ந்து ஹிட் படங்களைக் கொடுத்தார்.
கடைசியாக இவரது நடிப்பில் "சைரன்" திரைப்படம் வெளியாகி இருந்தது. அடுத்ததாக இவர் நடிப்பில் பிரதர், ஜெனி, காதலிக்க நேரமில்லை போன்ற திரைப்படங்கள் வெளியாகவுள்ளன.
அந்தவகையில் பிரதர் திரைப்படத்தை இயக்குநர் ராஜேஷ் இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு ஹரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் "பிரதர்" திரைப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் முடிவடைந்த நிலையில், இத்திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.
இதனிடையே நடிகர் ஜெயம் ரவியின் பிறந்தநாளான இன்று பிரதர் படக்குழுவினர் 'பிரதர்' படம் குறித்த புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதாவது, இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டீசர் வெளியீடு என்பன இம்மாதம் 21ஆம் திகதி நடைபெறுமென அறிவித்து, நடிகர் ஜெயம் ரவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளனர்.
இந்த வீடியோ இன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.