பிலிப்பைன்ஸில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் கடந்த ஜூலை மாதம் மருத்துவப் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ள இவர், தற்போது மிகவும் முதிய வயதான மருத்துவப் பட்டதாரியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
தான் மருத்துவத்துறையில் கற்ற சந்தர்ப்பத்தில் பலரும் எதிர்மறையான விமர்சனங்களை முன்வைத்ததாகவும் இருப்பினும் அவற்றைப் பொருட்படுத்தாது தனது குடும்பத்தினர் மற்றும் வகுப்பு நண்பர்கள் ஆகியோர் கொடுத்த ஆதரவினால் தன்னுடைய கனவை அடைந்துள்ளதாகவும் இவர் கூறியுள்ளார்.
65 முதல் 70 வயது வரை தன்னுடைய நினைவாற்றல், கண்பார்வை, செவிப்புலன் மற்றும் உடல் என அனைத்து விடயங்களிலும் பல சவால்களை எதிர்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பல சவால்களைத் தாண்டி தனது 70 ஆவது வயதில் மருத்துவராகப் பட்டம்பெற்ற இந்த முதியவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.