தனது முதல் திரைப்படத்திலிருந்து இப்பொழுது வரை இரசிகர்களின் ஆதரவைப் பெற்று முன்னணி நடிகராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் ஜெயம் ரவி.
நடிகர் ஜெயம் ரவி தற்பொழுது 'பிரதர்', 'ஜீனி' மற்றும் 'காதலிக்க நேரமில்லை' போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். 'பிரதர்' திரைப்படம் October 10 ஆம் திகதி வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், ஜெயம் ரவி நடித்துள்ள 'ஜீனி' திரைப்படத்தின் First Look மற்றும் இப்படத்தின் போஸ்டர்கள் சில மாதங்களுக்கு முன் வெளியாகின.
இந்த நிலையில் நடிகர் ஜெயம் ரவியின் பிறந்த நாளான நேற்று, 'ஜீனி' திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
அதில் ஜெயம் ரவி ஒரு அலாவுதீன் பூதத்தைப் போல் தோற்றம் அளித்துள்ளார். கல்யாணி பிரியதர்சன் மற்றும் வாமிகா கபி இருவரும் தேவதைகள் போல் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் அலாவுதீனின் கம்பளத்தில் வானத்தில் பறந்து கொண்டு செல்வது போல் போஸ்டரை வடிவமைத்துள்ளனர்.
அறிமுக இயக்குநரான புவனேஷ் அர்ஜுனன் இப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படத்தில் கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், தேவயாணி போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
இப்படம் நடிகர் ஜெயம் ரவியின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட படமாகும்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. ஆகவே விரைவில் ஜெயம் ரவியின் நடிப்பில் பல திரைப்படங்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.