துஷ்பிரயோக வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை அடையாளம் காணவும், குற்றத்தை நிரூபிக்கவும் DNA சோதனை ஒரு முக்கியமான அடிப்படையாகும். இதற்காக, பாதிக்கப்பட்டவரின் உடலில் இருந்து DNA மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பப்படும்.
ஆய்வகத்தில் உள்ள வல்லுநர்கள் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் DNA மாதிரிகளை மிகவும் சிக்கலான செயல்முறையின் மூலம் பிரிக்க வேண்டும். அதன் பின்னர் , குற்றம் சாட்டப்பட்டவரின் DNA வை பகுப்பாய்வுக்கு உட்படுத்துவார்கள்.
இந்த செயல்முறையை நிறைவு செய்ய சில நாட்கள் எடுக்கும். ஆனால், புதிய தொழில்நுட்பத்தின் மூலம், வெறும் 45 நிமிடங்களில் DNA மாதிரிகளை தனிமைப்படுத்தி சோதிக்க முடியும்.
சேகரிக்கப்பட்ட மாதிரியிலிருந்து இரண்டு நபர்களின் DNA வை Digitel Microfluidics ஐ பயன்படுத்தி, புதிய தொழில்நுட்பத்தின் மூலம் விரைவாக பிரிக்க முடியும். இந்தக் கண்டுபிடிப்பு தொடர்பான விபரங்கள் 'Advanced Science' இதழில் வெளியிடப்பட்டுள்ளன.