கடந்த மாதம் இவர் வசிக்கும் பகுதியில் காணப்படும் குறித்த காட்சியறைக்குச் சென்று மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் வண்டியினை வாங்கியுள்ளார்.
அதன்பின்னர் தனது தேவைகளுக்காக அந்த வண்டியைப் பயன்படுத்தி வந்த நிலையில், மூன்றாவது நாளில் இருந்தே அந்த மோட்டார் வண்டியில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.
இதனால் அவர் அந்த மோட்டார் வண்டியை மீண்டும் காட்சியறைக்கு எடுத்துச் சென்று தனது முறைப்பாட்டைக் கூறி அதனை நிவர்த்தி செய்து தருமாறு கூறியுள்ளார்.
இருப்பினும் குறித்த மோட்டார் வண்டியில் ஒரு வார காலத்தினுள் பல பிரச்சினைகள் ஏற்பட்டதுடன் அவற்றையும் சரி செய்து தருமாறு கோரி அவர் காட்சியறைக்கு சென்றுள்ளார்.
சுமார் ஒரு வார காலத்திற்கும் மேலாக தொடர்ச்சியான முறையில் பல பிரச்சினைகள் ஏற்பட்டதுடன் குறித்த காட்சியறைக்கு நேரில் சென்று கூறிய போதிலும் அங்கிருந்த ஊழியர்கள் அவருக்கு சரியான விளக்கத்தையோ அல்லது பிரச்சினைகளுக்கான தீர்வினையோ வழங்கவில்லை.
இதன் காரணமாக விரக்தி அடைந்த இவர் குறித்த காட்சியறைக்குச் சென்று தனது கையில் வைத்திருந்த பெற்றோலை ஊற்றி அந்த காட்சியறைக்கு தீ மூட்டியுள்ளார்.
விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 6 வாகனங்கள், கணினிகள் என அனைத்தும் முழுவதுமாக எரிந்து தீக்கிரையானதுடன் இவற்றின் பெறுமதி சுமார் 8.5 இலட்சம் இந்திய ரூபாய்கள் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.