WhatsApp ஐ தடைசெய்த 6 நாடுகள்.., காரணங்கள் இதோ !
SooriyanFM Gossip - WhatsApp ஐ தடைசெய்த 6 நாடுகள்.., காரணங்கள் இதோ !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
WhatsApp ஐ உலகளவில் சுமார் மூன்று பில்லியன் மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் மாத்திரம் சுமார் 530 மில்லியன் பயனர்கள் உள்ளனர். தனிப்பட்ட மற்றும் தொழில்முறை நோக்கங்களுக்காக WhatsApp ஐ பயன்படுத்துகின்றனர்.
இருப்பினும், ஆறு நாடுகளில் மெட்டாவுக்குச் சொந்தமான WhatsApp ஐ பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சீனா, ஈரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கட்டார் , சிரியா மற்றும் வட கொரியா ஆகிய நாடுகளே இவ்வாறு தடை விதித்துள்ளன.
வடகொரிய அதிபர் கிம் உள்ளூர் தகவல்கள் வெளியாகாமல் இருக்க WhatsApp க்குத் தடை விதித்துள்ளார்.
வெளிநாட்டு செயலிகளுக்குப் பதிலாக உள்நாட்டு செயலிகளை ஊக்குவிக்க, சீன அரசாங்கம் ஒரு விரிவான மூலோபாயத்தில் செயற்பட்டு வருகிறது. தகவல் தொடர்பை கட்டுப்படுத்தும் விதமாக WhatsApp க்குத் தடை விதித்துள்ளது.
சிரியாவிலும் WhatsApp தடை செய்யப்பட்டுள்ளது. சிரியாவில் நீண்ட காலமாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. சிரியா மீது பல பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் சிரியாவில் WhatsApp செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான நாடுகள் உள்நாட்டுப் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டுதான் WhatsApp ஐ தடை செய்துள்ளன.