அந்த வகையில் கால் நகங்களை முறையாக சுத்தம் செய்வது எப்படி என்பது பற்றி தெரிந்து கொள்வோம். கால் நகங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிதானது.
அகலமான பாத்திரத்தில் வெதுவெதுப்பான தண்ணீரை நிரப்பவும். அதில் 2 தேக்கரண்டி தேன் மற்றும் ஒரு எலுமிச்சை பழத்தின் சாற்றை சேர்க்கவும். எலுமிச்சை சாறு நகத்தை பதப்படுத்துவதுடன் அழுக்குகளை நீக்க உதவும். தேன் அற்புதமான Moisturizer ஆக செயற்படும். இந்தக் கலவையில் உங்கள் கால்களை குறைந்தபட்சம் 5 முதல் 15 நிமிடங்கள் ஊற வைத்து நன்கு மென்மையான பிறகு தண்ணீரை துடைத்தெடுத்து, சிறிது எண்ணெயை பூசவும்.
ஒரு மிருதுவான தூரிகையைப் பயன்படுத்தி பாதங்களை சுத்தம் செய்ய வேண்டும். இதன் மூலம் உங்கள் நகங்களில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அனைத்து அழுக்குகளையும் மெதுவாக நீக்க முடியும்.
காலணிகளை அதிகம் உபயோகிப்பவராக இருந்தால், அவற்றை நன்றாக உலர வைத்த பின் அணிய வேண்டும். ஏனெனில் தொடர்ச்சியாக ஈரப்பதம் படும் வகையிலும் பாதங்களை மூடி வைப்பதன் மூலமும், கால் நகங்கள் எளிதில் உடைய வாய்ப்பு உள்ளது.
இத்தகைய எளிமையான வழிமுறையைப் பின்பற்றி பாதங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.