Sooriyan Gossip - ஆப்கானிஸ்தான் குழாம் அறிவிப்பு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
76 Views
தென்னாபிரிக்கா அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான ஆப்கானிஸ்தான் குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் குழாத்திலிருந்து ஆரம்ப துடுப்பாட்ட வீரர் இப்ரஹீம் ஷர்தான் உபாதை காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அதேநேரம் தொடர்ந்து அணியிலிருந்து உபாதை காரணமாக வெளியேற்றப்பட்டிருக்கும் முஜீப் உர் ரஹ்மான் தென்னாபிரிக்க தொடரிலும் இடம்பெறவில்லை.
முன்னணி வீரர்கள் இருவர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ள போதும், உபாதையிலிருந்து குணமடைந்துள்ள ரஷீட் கான் தென்னாபிரிக்க தொடரில் விளையாடுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ரஷீட் கான் அணியில் இணைக்கப்பட்டுள்ளதுடன், உள்ளூர் போட்டிகளில் பிரகாசித்துள்ள இளம் வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அப்துல் மாலிக், டர்விஷ் ரஷூலி மற்றும் அல்லாஹ் மொஹமட் கஷான்பர் போன்ற வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.