தமிழ் சினிமாவில் தனக்கென தனி இரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கும் இளைய தளபதி விஜய் சினிமாவில் மட்டுமன்றி தற்போது அரசியலிலும் களமிறங்கியுள்ளார். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான 'GOAT' திரைப்படம் நல்ல விமர்சனங்களைப்பெற்றதோடு வசூலிலும் சாதித்து வருகிறது. இந்தத் திரைப்படத்தில் சினேகா, பிரபுதேவா, மோகன் , பிரஷாந்த் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தை தொடர்ந்து, விஜய் தற்போது தனது 69 ஆவது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். தற்காலிகமாக 'தளபதி 69' என பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தினை இயக்குநர் எச். வினோத் இயக்கவுள்ளார்.இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ள நிலையில் மோகன்லால், சமந்தா, சிம்ரன், மமிதா பைஜு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை இன்று 'தளபதி 69' பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான KVN புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதாவது நாளை மாலை 5 மணிக்கு 'தளபதி69' பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு போஸ்டர் வெளிவரும் என்றும் தெரிவித்துள்ளனர்.