SooriyanFM Gossip - இலங்கைக் குழாம் அறிவிப்பு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
112 Views
நியூசிலாந்து – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையே இந்த வாரம் ஆரம்பமாகும் இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 16 பேர் அடங்கிய இலங்கைக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த டெஸ்ட் தொடர் நாளை மறுதினம் காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகும் நிலையில் தொடரில் பங்கெடுக்கும் இலங்கை டெஸ்ட் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டிருக்கும் குழாம் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் பங்கெடுத்த அதே வீரர்களை பெரும்பாலும் கொண்டிருப்பதோடு, மிக முக்கிய மாற்றமாக ஒசத பெர்னாண்டோ இலங்கை குழாத்தில் உள்வாங்கப்பட்டிருக்கின்றார்.
தென்னாபிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை A அணிக்காக பிரகாசித்திருந்த ஒசத பெர்னாண்டோ குறித்த சிறப்பாட்டம் காரணமாகவே இலங்கை டெஸ்ட் அணியில் மிக நீண்ட இடைவெளி ஒன்றின் பின்னர் இணைக்கப்பட்டிருக்கின்றார்.