முதலையின் ஆயுட்காலம் 150 ஆண்டுகள் என்று சொல்லப்படுகின்றது. இவை ஊர்வன இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்காகும். இது நீரிலும், நிலத்திலும் வாழக்கூடியது. நான்கு கால்களையும் வலுவான வாலினையும் கொண்ட இந்த விலங்கினங்கள் ஆபிரிக்கா, ஆசியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா ஆகிய கண்டங்களின் வெப்ப மண்டலங்களில் வாழ்கின்றன.
இந்த நிலையில் 123 வயதான முதலை ஒன்று உலகின் மிகவும் வயதான முதலை என்ற சாதனையைப் படைத்துள்ள சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
5 பெண் முதலைகளுடன் வசித்து வரும் இந்த முதலை இதுவரையில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட முதலைகளை ஈன்றெடுக்க காரணமாக அமைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
16 அடி நீளமும் 700 கிலோ கிராம் எடையும் கொண்ட இந்த முதலை 1900 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் திகதி ஆப்பிரிக்காவில் உள்ள னெஸ்கோ வேர்ல்ட் ஹெரிடேஜ் டெல்டா போட்ஸ்வானவில் பிறந்துள்ளது.
இந்த வகையான முதலை 26 நாடுகளில் வசிக்கும் தன்மை கொண்ட ஒரு நைல் முதலை என்று கூறப்படுகிறது. இவை ஏரி, ஆறு, சதுப்பு நிலங்களில் வாழக்கூடியவை என்பதுடன் இந்த முதலை தொடர்பான செய்திகளை பலரும் தங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.