முதல் தனியார் விண்வெளி நடைபயணத் திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்ததை அடுத்து SpaceX Capsule மனிதர்களுடன்மீண்டும் பூமிக்குத் திரும்பியது.
ஒரு வரலாற்று சிறப்புமிக்க வெற்றிகரமான பணியை முடித்த பின்னர், 4 நபர்களுடன் சென்ற Space X Capsule புளோரிடாகடற்கரையில் வந்திறங்கியது.
விண்வெளி வீரர்கள் அல்லாத 4 பொது நபர்களுடன் உலகின் முதல் தனியார் விண்வெளி நடைபயணத் திட்டம்மேற்கொள்ளப்பட்டது. இந்தத் திட்டம் Polaris Dawn எனப் பெயரிடப்பட்டுள்ளது.
Polaris Dawn விண்கலத்தில் கோடீஸ்வர தொழிலதிபர் ஜாரெட் ஐசக்மேன், ஸ்கொட் போட்டீட் மற்றும் SpaceX இன் சாராகில்லிஸ் மற்றும் அன்னா மேனன் ஆகியோர் சென்றிருந்தனர்.
பொதுவாக விண்வெளி நடைபயணம் விண்வெளி வீரர்களால் மேற்கொள்ளப்படும். ஆனால் இங்கு முதல் முறையாக பொதுநபர்களுடன் மேற்கொள்ளப்பட்டது.
விரைவில் மீண்டும் விண்வெளி ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடவுள்ளதாக Space X நிறுவனம் அறிவித்துள்ளது.