WhatsApp ஒருமுறை மட்டுமே பார்க்கக் கூடிய வகையில் ‘View Once’ என்ற புகைப்படங்களை அனுப்பும் அம்சம் ஒன்றை அறிமுகம் செய்தது. இதில் நீங்கள் ஒருவருக்கு புகைப்படத்தை அனுப்பினால் ஒரு முறை மட்டுமே பார்க்க முடியும். மீண்டும் அதனை பார்க்கவோ, வேறு யாருக்கும் Forward செய்யவோ முடியாது.
ஆனால் மெசேஜிங்கில் உள்ள இந்தத் தனியுரிமையை மையமாகக் கொண்ட அம்சம் ஒரு பெரிய பாதுகாப்புக் குறைபாட்டைக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு முறை மட்டுமே பார்க்கக் கூடிய ஒப்ஷனில் அனுப்பினாலும் ஒருவர் Desktop இல் புகைப்படம் , வீடியோவை பார்ப்பது மட்டுமின்றி அதை அவர்களின் Laptop , Computer இல் சேமிக்க முடியும் என்று தெரியவந்துள்ளது.
WhatsApp தங்களது யூசர்களுக்கு தவறான தனியுரிமையை வழங்க முயற்சிப்பதை விட, அந்த அம்சத்தை அகற்றி விடுவது நல்லது என்று கூறப்பட்டுள்ளது.
பொதுவாக WhatsApp யூசர்கள் தாங்கள் ‘View Once’ அம்சத்தில் அனுப்பும் புகைப்படம் அல்லது வீடியோவை Receive செய்யும் நபரால் சேமிக்கவோ அல்லது Screen shot எடுக்கவோ முடியாது என்று நம்புகின்றனர்.
ஆனால், உண்மையை அறிந்தால் இந்த அம்சத்தை தினசரி பயன்படுத்தும் பில்லியன் கணக்கானவர்கள்
நிச்சயமாக அதிர்ச்சியடைவார்கள்.
ஏனெனில் நீங்கள் அனுப்பும் புகைப்படம் , வீடியோவை Receive செய்யும் நபரால் சேமிக்க முடியும். இதனிடையே WhatsApp எதிர்காலத்தில் ‘View Once’ அம்சத்தை Web பயன்பாட்டிற்குக் கொண்டுவருகிறது. இதற்கான Beta சோதனைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஆனால் அதற்குள் இந்தப் பாதுகாப்பு பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.
அதுவரை, தனியுரிமை அம்சத்தின் மூலம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிரும்போது கவனமாக இருக்குமாறும், நீங்கள் நம்பக்கூடியவர்களுடன் மட்டுமே இந்த ‘View Once’ அம்சத்தை பகிருமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.