அந்த வகையில் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அதிகம் விளையும் பழமாகவும், அதிக மக்களால் உட்கொள்ளப்படும் பழமாகவும் மங்குஸ்தான் காணப்படுகின்றது.இந்த மங்குஸ்தான் பழங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் எவை என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
உடல் எடையை அதிகரிக்க தினமும் மங்குஸ்தான் பழங்களை சாப்பிட வேண்டும். இதில் இருக்கும் சத்துகள் உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது.
நமது உடலில் நோய் எதிர்ப்பு திறன் வலுவுடன் இருப்பதற்கும் நுண்கிருமிகளை எதிர்த்துப் போராடுவதற்கும் மங்குஸ்தான் பழங்களை அடிக்கடி சாப்பிடுவது மிகவும் நல்லது.
எந்த வகை மூல நோயாக இருந்தாலும் மங்குஸ்தான் பழங்கள் மற்றும் மங்குஸ்தான் பழ பானத்தைக் குடித்து வந்தால் மூல நோய் விரைவில் குணமாகும்.
நமது உடலின் முக்கிய உறுப்புகளான கண்களின் பார்வைத் திறன் தெளிவாக இருக்க விட்டமின் A மிகவும் முக்கியமாகும். மங்குஸ்தான் பழங்களில் இந்த சத்துக்கள் அனைத்தும் கிடைக்கின்றன.
எனவே மங்குஸ்தான் பழங்களை வாரத்திற்கு இருமுறையாவது உட்கொண்டு பலன் பெறுவோம்.