தெலுங்கு திரையுலகில் மட்டுமல்லாது Pan india ஸ்டாராக வலம் வரும் நடிகர் பிரபாஸ் ஏராளமான இரசிகர்களை தன்வசம் வைத்துள்ளார். பெரிய பொருட்செலவில் உருவாகும் திரைப்படங்களைத் தெரிவு செய்து நடித்து வரும் இவர் நடிப்பில் வெளியான 'ஆதி புருஷ்', 'சலார்' போன்ற திரைப்படங்கள் இரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பைப்பெறவில்லை.
இதனைத்தொடர்ந்து இவர் நடிப்பில் அண்மையில் வெளியான 'கல்கி 2898 ஏடி' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப்பெற்றாலும் வசூலில் சாதித்தது.
இந்த நிலையில் நடிகர் பிரபாஸ் அடுத்ததாக இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் 'Sprit' திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். முன்னதாக சந்தீப் ரெட்டி இயக்கத்தில் வெளியான 'அனிமல்' திரைப்படம் நல்ல வசூலைப்பெற்றது. இதேவேளை 'Spirit' திரைப்படத்தின் Script வேலைகளை சந்தீப் ரெட்டி வங்கா நிறைவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகவுள்ள இந்தத் திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் பிரபாஸ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை இந்தத் திரைப்படத்தின் பட்ஜெட் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இத்திரைப்படம் பிரம்மாண்டமாக இந்திய மதிப்பில் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.