முன்னதாக Gemini Subscriber களுக்கு மட்டுமே கிடைத்து வந்த Gemini Live AI அம்சம் தற்போது அனைத்து Android பயனர்களுக்கும் கிடைக்கும் என்ற அறிவிப்பை Google நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இருவழி உரையாடல் அடங்கிய Gemini Live என்ற AI அம்சத்தை Google தற்போது அனைத்து Android யூசர்களுக்கும் இலவசமாக வழங்குகிறது.
ஆரம்பத்தில் இந்த அம்சம் Gemini Advanced subscriber களுக்கு மட்டுமே கிடைத்தது. ஆனால் தற்போது இந்த Gemini AI அம்சம் அனைத்து Gemini பயனர்களுக்கும் Android இல் கிடைக்கிறது.
Gemini AI Live அம்சத்தை Android போனில் Enable செய்வது எப்படி?
*முதலில் உங்களுடைய Phone இல் உள்ள Gemini Application னை திறந்து கொள்ளுங்கள்.
*Application இன் கீழ் வலது பக்கத்தில் ஒரு புதிய வட்ட, அலை வடிவ Icon இருக்கும். அதனை Click செய்யுங்கள்.
*இப்போது Hold மற்றும் End அடங்கிய Window ஒன்று screen இல் காண்பிக்கப்படும்.
*உரையாடலை நிறைவு செய்ய Notification ஐ தட்டுங்கள் அல்லது ‘Stop’ என்று கொடுத்தாலும் போதும்.
*உரையாடல் நிறைவடைந்ததும் நீங்கள் சொன்ன விடயங்களை AI அம்சம் எழுத்து வடிவத்தில் கொடுக்கும்.
*உங்களுடைய அனைத்து உரையாடல்களின் வரலாற்றையும் இந்த அம்சம் பராமரிக்கிறது. இதன் மூலமாக பயனர்கள் தங்களது பழைய உரையாடல்களை தேவைப்படும்போது பார்த்துக் கொள்ளலாம்.