உங்கள் சருமத்தில் சேர்ந்திருக்கும் அழுக்குகளை நீக்க குறைந்தது ஒரு நாளைக்கு 2 முறையாவது சருமத்தைக் கழுவுங்கள்.
ஒரு சிறிய பாத்திரத்தில் கிழங்கு சாற்றுடன் சிறிதளவு தயிர் சேர்த்து ஐந்து நிமிடம் சருமத்தில் தடவி நன்கு காய்ந்ததும் கழுவ வேண்டும்.
கடலை மாவுடன் சிறிது எலுமிச்சை சாறு, தேவைக்கேற்ப கற்றாழை ஜெல் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து சருமத்தில் பூசிய பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
ரோஜா இதழை நன்கு காயவைத்து தூளாக்கி அதனுடன் தேன் சேர்த்து நன்கு கலந்து சருமத்தில் தடவி காய்ந்த பிறகு கழுவ வேண்டும்.
மேற்குறிப்பிட்டுள்ள எளிமையான வழிமுறைகளைப் பின்பற்றி சருமத்தின் அழகை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.