அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய லிச்சிப் பழத்தில் பலவகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
லிச்சிப் பழத்தில் அதிகளவான நார்ச்சத்துக்கள் உள்ளதால் செரிமானப் பிரச்சினைகள் உள்ளவர்கள் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் உள்ளவர்கள் இந்தப் பழத்தை அதிகளவு உட்கொள்வது மிகவும் நல்லது.
இப்பழத்தில் விட்டமின் C உள்ளதால் நம் உடலிலுள்ள இரும்புச் சத்தை உறிஞ்சும் திறனை அதிகரிக்கும். இதன் காரணமாக இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகரித்து, இரத்த சோகை வருவதைத் தடுக்க உதவுகிறது.
லிச்சிப் பழத்தில் இருக்கும் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து என்பன அதிகளவில் உள்ளதால், நம் உடலில் இருக்கும் தேவையற்றக் கொழுப்புகளை வெளியேற்றி உடல் எடையை வேகமாகக் குறைக்க உதவுகிறது.
லிச்சிப் பழத்தில் புற்றுநோய் எதிர்ப்புப் பொருள் உள்ளதால், இந்த லிச்சிப் பழத்தை பெண்கள் அதிகளவு உட்கொண்டால் பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோயில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.
லிச்சிப் பழத்தில் Anti-oxidants அதிகம் உள்ளதால், அது இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள மிகவும் உதவுகிறது. எனவே, லிச்சிப் பழத்தை அதிகளவு உட்கொண்டு வந்தால் இதயத்தை ஆரோக்கியமாகப் பாதுகாக்கலாம்.