HIP HOP ஆதி தற்போது 'கடைசி உலகப் போர்' எனும் புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார் . ஆதி கதாநாயகனாக நடித்துள்ளஇந்தத்திரைப்படத்தில் நாசர், நட்டி , அனகா, அழகன் பெருமாள், ஹரிஷ் உத்தமன், முனிஷ்காந்த், சிங்கம்புலி, இளங்கோகுமரவேல், தலைவாசல் விஜய், மகாநதி சங்கர் உள்ளிட்ட பலர் இனைந்து நடித்துள்ளனர்.
போர் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு ஆதியே இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படம் கடந்த 20ஆம் திகதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தத்திரைப்படத்தில் நடராஜ் என்ற நட்டி கிங் மேக்கர் என்ற கதாபாத்தரத்தில் நடித்துள்ளார் .இவரின் கதாபாத்திரத்தை விவரிக்கும்வகையில் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள அரசியல் அண்டர்டேக்கர் என்ற பாடலின் வீடியோவை படக்குழுவெளியிட்டுள்ளது.