அமெரிக்காவின் நியூயோர்க்கில் YouTube நிறுவனத்தில் அண்மையில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில், YouTube Shorts இல் செயற்கை நுண்ணறிவைக் கொண்டுவர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
AI மூலம், Youtube இல் Shorts செய்வதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. Google நிறுவனத்தின் DeepMind உதவியுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள V .E .O மூலம், YouTube Shorts இல் இந்த வசதியை பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Youtube Shorts இல் AI மூலம், BackGround ஐ மாற்ற முடியும். அதேபோல், ஆறு வினாடிக்கு தனியாக Shorts ஐ உருவாக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், Youtube பயனர்கள் தங்களின் Heading, Thumbnail ஆகியவற்றை இந்த AI உதவியுடன் மேற்கொள்ள முடியும். அதேபோல், வீடியோவுக்கான யோசனைகளையும் இந்த AI உதவியுடன் பெற முடியும் என சொல்லப்பட்டுள்ளது.
இந்த AI தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்படும் வீடியோக்கள் மீது AI மூலம் உருவாக்கப்பட்டது எனும் Lebel இருக்கும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.