‘வெண்ணிலா கபடிகுழு’ திரைப்படம் மூலம் கதாநாயகனாக தமிழ்த் திரைப்படத்துறையில் அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால்.
கடந்த 2022 ஆம் ஆண்டு அறிமுக இயக்குநர் பிரவீன் இயக்கத்தில் ‘ஆர்யன்’ என்ற திரைப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார்.
ஒரு சில காரணங்களால் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து, நடிகர் விஷ்ணு விஷால் ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய ‘லால் சலாம்’ திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில், மீண்டும் நீண்ட இடைவெளிக்குப் பின்பு ‘ஆர்யன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக நடிகர் விஷ்ணு விஷால் தனது X தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இப்படத்தில் ஷ்ரதா ஸ்ரீனாத், வாணி போஜன் மற்றும் செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படமானது, ஒரு Police Crime Thriller கதைக்களத்தில் உருவாக்கப்பட்ட திரைப்படமாகும்.
இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகவுள்ளது.
இத்திரைப்படத்தின் Release திகதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.