செயற்கை நுண்ணறிவுத் (AI) தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அதன் வளர்ச்சிக்கும், அதன் மாற்றத்திற்கும், அதன் பயன்பாட்டிற்கும் உருவம் கொடுத்து வரும் Top 100 நபர்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது Time இதழ்.
இந்தப் பட்டியலில் AI தொழில்நுட்பத்தை உருவாக்குபவர்களில் இருந்து, அதனை மக்களிடம் கொண்டு சேர்ப்பவர்கள், அதன் தவறான பயன்பாட்டை எதிர்த்துப் போராடுபவர்கள் வரை பலருடைய பெயர்களும் இடம்பெற்றுள்ளது.
மக்களின் அன்றாட வாழ்க்கையில் AI-இன் பயன்பாட்டைத் தொடங்கி வைத்த சுந்தர் பிச்சை முதல் நபராக இந்தப் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார்.
மைக்ரோசாஃப்டை வழிநடத்தி வரும் சத்யா நாதெல்லா இந்தப் பட்டியலில் இரண்டாமிடம் பிடித்திருக்கிறார்.
Amazon CEO ஜாஸி மூன்றாமிடத்தில் உள்ளார். நான்காம் இடத்தில் அர்விந்த் ஸ்ரீநிவாஸ், ஷிவ் ராவ், அபிரிட்ஜ் , ஆனந்த் விஜய் சிங், ப்ரோட்டான், அம்பா கக், AI நவ் இன்ஸ்டிட்யூட் உள்ளிட்ட பலர் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.