அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான நேற்றைய நான்காவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 186 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
மழை காரணமாக போட்டி 39 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது.
போட்டியில் முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 39 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 312 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
தொடர்ந்து 313 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய அவுஸ்திரேலிய அணி 24.4 ஓவர்கள் நிறைவில் சகல
விக்கட்டுக்களையும் இழந்து 126 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.
இதன் மூலம் 5 போட்டிகளைக் கொண்ட தொடரை 2 - 2 என்ற நிலையில் இங்கிலாந்து அணி சமப்படுத்தியுள்ளது.