தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி.தற்போது சர்ச்சைக்குரிய வகையில் நடிகர் ஜெயம் ரவியின் விவாகரத்துப் பிரச்சினை பேசப்பட்டு வருகிறது.
நடிகர் ஜெயம் ரவி தனது விவாகரத்து விஷயத்தை வெளிப்படையாக போட்டு உடைத்தது தான் பெரிய அளவில் பேசு பொருளாக மாறி இருக்கிறது.
ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ஆகிய இருவரும் பிரிவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்ததாக ஜெயம் ரவி சென்னையில் இருந்து மும்பைக்கு சென்று செட்டில் ஆக இருப்பதாகக் கூறப்படுகிறது.
Bollywood தயாரிப்பு நிறுவனங்களின் திரைப்படங்களில் நடிகர் ஜெயம் ரவி நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவருடைய புதிய அலுவலகம் மும்பையில் தொடங்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.