உலகில் அதிக அளவு மக்களால் உணவாக சாப்பிட பயன்படுத்தப்படும் தானியமாக கோதுமை இருக்கிறது.
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த முழுமை தானியங்களில் ஒன்றாக கோதுமை விளங்குகிறது. தினசரி மூன்று வேளைகளும்உணவாக உட்கொள்ளத் தக்க தானிய வகைகளில் கோதுமை பிரதான இடத்தை வகிக்கிறது. அப்படிப்பட்ட கோதுமை தானியஉணவுகளை சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் எவை என்பதைப் பார்ப்போம்.
நார்ச்சத்து நிறைந்த கோதுமையை உணவாக செய்து சாப்பிடுவதால் இரத்தத்தில் இருக்கின்ற நச்சுக்கள் அனைத்தும்வெளியேறி, உடலை தூய்மைப்படுத்துகிறது.
தோலில் இருக்கின்ற நச்சுக்கள் வெளியேறி விடுவதால் முகப்பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவை ஏற்படாமல் சருமத்தைஅழகாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.
கோதுமையில் ஜிங்க் எனும் சத்து அதிகமாக உள்ளது. இந்த ஜிங்க் சத்து கூந்தலுக்கு பலம் தந்து, கூந்தல் அடர்த்தியாக வளரஉதவுகிறது. மேலும் கூந்தலுக்கு பளப்பளப்புத் தன்மையையும் தருகிறது.
கோதுமை, இரத்தத்தில் குளுக்கோஸின் அளவை சரியான விகிதத்தில் வைத்திருந்து நீரிழிவு நோய் வராமலும் தடுக்கிறது.
எனவே ஆரோக்கியம் நிறைந்த கோதுமையில் தயாரிக்கும் உணவுகளை உட்கொண்டு பலன் பெறுவோம்.