WhatsApp, Spam மற்றும் தனியுரிமையை(privacy) பாதுகாக்க புதிய பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தவுள்ளது.
அதாவது தெரியாத எண்களில் இருந்து வரும் செய்திகளை தானாகத் தடுக்க அனுமதிக்கும் அம்சத்தை WhatsApp தற்போது சோதித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
WABetaInfo படி, இந்த அம்சம் Android 2.24.20.16 இல் சில Beta டெஸ்டர்களுக்கு கிடைக்கிறது. அறியப்படாத கணக்கு செய்திகளைத் தடுக்க இதை செயல்படுத்தலாம்.
இந்த அம்சம் செயல்படுத்தப்பட்டதும், பயனரின் தொடர்புகளில் சேமிக்கப்படாத கணக்குகளிலிருந்து வரும் செய்திகளை தானாகத் தடுக்கும்.
இந்த அம்சம் Spam செய்திகளைத் தடுக்க வடிவமைக்கப்பட்டுள்ள போதிலும், அறியப்படாத அனைத்து கணக்குகளிலிருந்தும் செய்திகளைத் தடுக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
அதற்குப் பதிலாக, குறுகிய காலத்தில் அசாதாரணமாக அதிக எண்ணிக்கையிலான செய்திகளை அனுப்பும் கணக்குகளை இது குறிவைக்கும்.
இது Spam அதிகரிப்பைத் தடுக்கவும், SmartPhone செயல்திறனை மேம்படுத்தவும் உதவும். இது WhatsApp இல் தனியுரிமை(privacy) சார்ந்த புதுப்பிப்புகளின் அண்மைய Update ஆகும்.
கடந்த காலத்தில், அழைப்புகளில் பயனர்களின் IP முகவரிகளைப் பாதுகாக்கவும், மூன்றாம் தரப்பு கண்காணிப்பைத் தடுக்க இணைப்பு முன்னோட்டங்களை முடக்கவும் நிறுவனம் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.