இந்தத் திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர்களை அறிமுகம் செய்யும் வீடியோக்களை படக்குழு தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது.
இதன்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ரித்திகா சிங், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பகத் பாசில், அபிராமி ஆகியோரின் கதாபாத்திரங்கள் குறித்த வீடியோக்கள் வெளியிடப்பட்டன.
அனிருத் இசையமைத்துள்ள இந்தத் திரைப்படத்தின் Teaser அண்மையில் வெளியாகி இரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்த நிலையில் இத் திரைப்படத்தின் Trailer நாளைய தினம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.