Gennaris Bionic Vision System என்று அழைக்கப்படும் இந்த தொழில்நுட்பம் விலங்குகளுக்கு பொருத்தப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்தச் சோதனை முயற்சி வெற்றியளித்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது மனிதர்களுக்கும் வெற்றிகரமாக பொருந்தினால் , பார்வையை இழந்த கோடிக்கணக்கான மக்கள் மீண்டும் பார்வை பெற முடியும்.
குறித்த தொழில்நுட்பம் சிகிச்சையளிக்கப்படாத குருட்டுத்தன்மைக்கான தீர்வில் புரட்சியை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
குறித்த ஆராய்ச்சி ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நடந்து வருகிறது. இந்த மேம்பட்ட அமைப்பு பொதுவாக கண்ணிலிருந்து மூளைக்கு காட்சி தகவல்களை அனுப்பும் கண் நரம்புகள் வழியாக செல்வதன் மூலம் செயற்படுகிறது.
இது மூளையில் உள்ள பார்வை மையத்திற்கு நேரடியாக சமிக்ஞைகளை அனுப்புகிறது. இது பயனரை இயற்கைக் காட்சிகளைக் காண அனுமதிக்கிறது.
இந்த தொழில்நுட்பம் இப்போது மனிதர்களுக்கும் சோதனையடிப்படையில் பொருத்தப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன