தன்னுடைய இரக்க உணர்வை வெளிப்படுத்தும் வகையில், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ,அரிய வகை மூளைக் கோளாறு மற்றும் வளர்ச்சி ஹார்மோன் குறைபாட்டுடன் போராடும் சிறுவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கூறி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இது தொடர்பான காணொளிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியின் இந்த செயலினால் பேரானந்தமடைந்த குறித்த சிறுவன் ஆனந்தக்கண்ணீர் வடித்த காட்சிகளும் குறித்த காணொளியில் பதிவாகியுள்ளன.
“உங்களுக்கு 8ஆவது பிறந்தநாள் வாழ்த்துகள். உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் அன்பால் சூழப்பட்ட இந்தச் சிறப்பு நிகழ்வை சந்தோஷமாகக் கொண்டாடுவீர்கள் என்று நானும் எனது மனைவியும் நம்புகிறோம். இந்த இளம் வயதிலேயே நீங்கள் வெளிப்படுத்தும் வலிமை மற்றும் உறுதியால் நாங்கள் மிகவும் ஊக்கமடைகிறோம். மேலும் நீங்கள் தொடர்ந்து போராட எங்களின் அன்பையும் வாழ்த்துக்களையும் உங்களுக்கு அனுப்புகிறோம். நீங்கள் ஒருபோதும் தனியாக இல்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இறைவன் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. தைரியமாக இருங்கள்” என அவர் தனது பிறந்தநாள் வாழ்த்துக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
டொனால்ட் டிரம்பின் இந்தச் செயலை பலரும் பாராட்டி வருவதுடன் தங்களது வாழ்த்துக்களைக் குறித்த சிறுவனுக்கு தெரிவித்து வருகின்றனர்.