இந்தத் திரைப்படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.
இப்படத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
திரைப்படம் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுவரும் நிலையில்,இப் படத்தை பார்த்த பெரும்பாலானவர்கள் படத்தைப் பாராட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
அந்தவகையில் அண்மையில் படத்தை பார்த்துவிட்டு சிவகார்த்திகேயன் படக்குழுவை அழைத்து பாராட்டினார்.அதன் பின்னர் படத்தை பார்த்த வெற்றிமாறன், பா. ரஞ்சித் , கிரிக்கெட் வீரரான அஸ்வின் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் படக்குழுவைப் பாராட்டி அவர்களது எக்ஸ் தளத்தில் பதிவிட்டனர்.
இந்நிலையில், நடிகர் விஜயகாந்தின் பொன்மனச் செல்வன் படத்தில் இளையராஜா இசையமைத்த, ‘நீ பொட்டு வச்ச தங்கக் குடம்’ பாடலை படக்குழுவினர் அட்டகத்தி தினேஷின் சில காட்சிகளுக்குப் பயன்படுத்தியிருந்தனர்.
இதனால், நடிகர்கள் தினேஷ், ஹரிஷ் கல்யாண் உட்பட லப்பர் பந்து படக்குழுவினர் இளையராஜாவை நேரில் சந்தித்து தங்களது நன்றியைத் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.