அழகிப் போட்டிகள் பொதுவாக இளம் பெண்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு வரும் நிலையில், குறித்த 80 வயது மூதாட்டி கொரியாவின் பிரபஞ்ச அழகிப் போட்டியில் பங்கேற்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.
“நான் உலகை ஆச்சரியப்பட வைக்க விரும்புகிறேன்,” என்று குறித்த அழகிப் போட்டியின் இறுதிப்போட்டிக்கு முன்பு அவர் தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் கூறியுள்ளார்.
மேலும், “நீங்கள் நேர்மறையான சிந்தனையாளராக இருக்க வேண்டும். ஏனெனில், தற்போதைய காலகட்டத்தில் பலர் எதிர்மறையாக உள்ளனர்". என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
1952 ஆம் ஆண்டு முதல் மிஸ் யுனிவர்ஸ் போட்டிகள் நடைபெற்று வரும் அதேவேளை, குறித்த மிஸ் யுனிவர்ஸ் போட்டிகள் ஆரம்பிக்கப்படுவதற்கு சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் இவர் பிறந்துள்ளதுடன் தற்போது இவரின் பேரப்பிள்ளைகளின் வயதை ஒத்த அழகிகளுடன் போட்டியிடும் அதேவேளை 73 ஆண்டுகால வரலாற்றில் மிகவும் வயதானவராக பங்கேற்பதும் குறிப்பிடத்தக்கது.