இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ' Goat '.
அடுத்ததாக இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் 'தளபதி 69 '
திரைப்படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இப்படமே விஜய் நடிக்கும் கடைசிப் படம் எனக் கூறி வருகின்றனர். அதன் பிறகு அவர் முழுவதுமாக அரசியல் பணியில் ஈடுபடவுள்ளதாகக் கூறியிருந்தார்.
இத்திரைப்படம் அடுத்த வருடம் October மாதம் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.
இப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கவிருக்கும் நிலையில், ' Animal ' மற்றும் ' Kanguva ' திரைப்படங்களில் வில்லனாக நடித்துள்ள Bollywood நடிகர் Bobby Deol 'தளபதி 69 ' இல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம்.
இதனை உறுதிப்படுத்தும் வகையில், படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
'தளபதி 69 ' திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திரைப்படத்தின் பூஜை October 4 ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும் October 5ஆம் திகதி படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.