இந்த விட்டமின்கள் அனைத்தும், கரையக்கூடிய கொழுப்புகள். ஆகவே தான் இது உடல் எடையை அதிகரிக்காது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்றைய காலத்தில் சுத்தமான நெய்யைக் கண்டுபிடிப்பது சவாலாக இருந்தாலும்,சில எளிய வழிகளைப் பயன்படுத்தி நாம் அதைக் கண்டறியலாம்.
சுத்தமான நெய் என்பது அரை வெப்பநிலையில் உருகும் தன்மை கொண்டது. சிறிதளவு நெய்யை உள்ளங்கையில் வைத்துப்பாருங்கள். சிறிது நேரத்திலேயே உள்ளங்கையில் வைக்கப்பட்ட நெய் உருகிவிட்டால் அது சுத்தமான நெய் ஆகும்.
இரண்டாவதாக, நெய்யை ஒரு பாத்திரத்தில் வைத்து சூடுபடுத்தும்போது அது உருகி கடும் மஞ்சள் நிறத்தில் வந்தால் அது சுத்தமான நெய்.
அதனைத்தவிர்த்து, காலதாமதமாக உருகி,மஞ்சள் நிறத்தில் வந்தால் அது கலப்படமான நெய் ஆகும். அதேபோல ஒரு திரியை நெய்யில் நனைத்து தீபம் ஏற்றிப் பாருங்கள். சுத்தமான நெய் நீண்ட நேரம் எரியும். கலப்படம் செய்யப்பட்ட நெய் விரைவில் கருகிவிடும்.
அதேபோல ஒரு சிறு துண்டு நெய்யை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து பாருங்கள். சுத்தமான நெய் உடனடியாக தண்ணீரில் கரைந்துவிடாமல் சிறிது நேரம் மேலே மிதக்கும்.
இப்படியான வழிமுறைகள் மூலம் நல்ல தரமான நெய்யை வாங்கிப் பயன்படுத்துங்கள்.