நாசாவின் புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸை சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து பாதுகாப்பாக அழைத்து வர Dragon விண்கலம் அனுப்பப்பட்டுள்ளது.
நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஜூன் மாதம் போயிங் ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்றனர்.
ஸ்டார்லைனர் விண்கலத்தின் த்ரஸ்டர் சிக்கல்கள் மற்றும் ஹீலியம் கசிவுகளின் காரணமாக, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் பூமிக்குத் திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது.
விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறுகளை சரி செய்யும் பணியில் நாசா விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். ஆனால் சிக்கல்கள் எதுவும் சரி செய்யப்படவில்லை.
இதனைத்தொடர்ந்து கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஆள் இல்லாமல் போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் பூமிக்கு திரும்பியது.
இந்நிலையில் நாசாவின் SpaceX Crew-9 விண்கலம் புளோரிடாவின் விண்வெளிப்படை நிலையத்தில் உள்ள விண்வெளி ஏவுதள வளாகத்தில் இருந்து நேற்று இரவு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
சுமார் 28.5 மணி நேரம் பயணித்து இந்த விண்கலம் சர்வதேச விண்வெளி மையத்தை சென்றடையும் என கூறப்படுகிறது. இதையடுத்து சர்வதேச விண்வெளி மையத்துடன் இந்த Dragon விண்கலத்தின் Capsule Tolk செய்யப்படும் என கூறப்படுகிறது.
சுனிதா வில்லியம்ஸும் புட்ச் வில்மோரும் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் பூமிக்கு திரும்புவார்கள் என கூறப்பட்டுள்ளது.