காலையில் வெறும் வயிற்றில் ஒரு கப் பாகற்காய் சாறுடன், ஒரு தேக்கரண்டி எலுமிச்சைச்சாற்றைக் கலந்து அருந்தினால்இரத்தம் சுத்தமாகும். பாகற்காயை உணவில் சேர்த்துச் சாப்பிடுவதால் அஜீரணக் கோளாறுகள் நிவர்த்தியாகும்.
2 தேக்கரண்டி பாகற்காய் சாறுடன் தண்ணீர் சேர்த்துக் குடித்து வர மஞ்சள் காமாலை நோய் குணமாகும். பாகற்காய் பசியைநன்றாகத் தூண்டக்கூடியது. உணவில் பாகற்காயை சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள பித்தம் குறையும்.
பாகற்காயை பெண்கள் சாப்பிட்டால் தாய்ப்பால் சுரப்பது அதிகரிக்கும். சர்க்கரை வியாதிக்கு பாகற்காய் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.
பாகற்காயை வதக்கிச் சாப்பிட்டாலும், ஆவியில் வேகவைத்து சாப்பிட்டாலும் சத்துக்கள் முழுமையாகக் கிடைக்கும். இதனுடன் எலுமிச்சை, இஞ்சி, மிளகு போன்றவற்றை சேர்த்துச் சாப்பிட்டால் அதன் கசப்புத் தன்மை குறையும்.
பாகற்காயை அரைத்து ஜூஸாக அருந்தும்போது கிடைக்கும் பலன்கள், சமைத்த பாகற்காயில் கிடைக்கும் பலன்களை விடமிகமிக அதிகம்.
கண்பார்வையை மேம்படுத்துவதில் பாகற்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. கண் பார்வை கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள்பாகற்காயைச் சாப்பிடுவதால் சிறந்த பலனைப் பெறலாம்.
எனவே ஆரோக்கியம் தரும் பாகற்காயை உட்கொண்டு நலமுடன் வாழ்வோம்.