நண்டில் புரோட்டீன்கள் அதிகம் உள்ளதால்தான், நண்டு உடலுக்கு நன்மை தரக்கூடியதாக உள்ளது. அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஒரு உணவாக உள்ளது.
தசைகளின் சீரமைப்புக்கு இந்த நண்டுகள் உதவுகின்றன.குறைவான கொழுப்பு உள்ளதால், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்களிலிருந்து பாதுகாக்கின்றது. அதுமட்டுமின்றி இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதய நோயாளிகளுக்கு நண்டு மிகச்சிறந்த உணவாக விளங்குகிறது.
உடல் எடையை குறைக்கக் கூடியவர்கள், உணவில் நண்டை அதிகமாக சேர்த்துக் கொள்வார்கள். இதில், விட்டமின் A உள்ளதால், கண்பார்வைக்கு பெரும் நன்மை தருகிறது.
ஒமேகா 3 கொழுப்பு அமிலம், செலெனியம், தாமிரம் போன்ற சத்துக்கள் நண்டுக்குள் உள்ளமையால் மூளை சிறப்பாக செயற்படவும், நரம்பு மண்டலத்தின் செயற்பாடுகளுக்கும் உதவி செய்கிறது.