மோசடிகள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் TrueCaller தற்போது அதன் Insurance Policy ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த Insurance TrueCaller Application மூலமாக கிடைக்கிறது.
மோசடி மூலமாக பயனர்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்புகளில் இருந்து இந்த Insurance பாதுகாப்பு அளிக்கிறது. இந்த Insurance Policy குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.
18 அல்லது அதற்கும் மேற்பட்ட வயது கொண்டவர்கள் ,தற்காலிகமாக வெளிநாடு பயணிப்பவர்கள் ஆகியோர் இந்த Insurance ஐ பெறுவதற்கு தகுதியுடைவர்கள்.
Policy ஐ Activate செய்வதற்கு வெறுமனே நீங்கள் Truecaller இல் உள்ள பிரீமியம் டெபிற்கு செல்ல வேண்டும். இந்தப் பதிவு ஒருமுறை மட்டுமே செய்யப்படும்.
அடுத்த முறை அது உங்களுடைய Premium Subscription னுடன் Automatic காக புதுப்பித்துக்கொள்ளும். கூடுதலாக இதற்கு எந்த ஒரு ஆவணங்களும் தேவையில்லை.
இந்தப் புதிய அம்சம் முதல் முறையாக இந்தியாவில் அறிமுகமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.