சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘வேட்டையன்’ திரைப்படம் October 10ஆம் திகதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில், அதற்குப் போட்டியாக ஒரு தமிழ்ப் படம் வெளியாகவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் போது, மற்ற நடிகர்களின் திரைப்படங்கள் வெளிவருவது அரிதானது.
இருந்தாலும் சில திரைப்படங்கள் மாஸ் நடிகர்களின் படங்களுடன் வெளியாகியும் உள்ளது.
இந்த நிலையில், October 11ஆம் திகதி நடிகர் ஜீவா நடித்த ’Black’ திரைப்படம் வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை நடிகர் ஜீவா தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.
இந்தத் திரைப்படத்தின் Trailer சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இந்தப் படமும் இரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.