பொதுவாக அசைவ உணவுத் தயாரிப்புகளில் அன்னாசிப் பூவின் பங்களிப்பு நிச்சயமாக இருக்கும். குருமா, பிரியாணி உள்ளிட்ட உணவுகளில் சேர்க்கப்படும் அன்னாசிப் பூவின் நன்மைகள் குறித்து இந்தப்பதிவில் காணலாம்.
அன்னாசிப்பூவில் இருக்கும் Antioxidant, Vitamin A,C சத்துக்கள் மூலமாக உடலுக்கு நலம் கிடைக்கிறது.
ஒரு டம்ளர் தண்ணீரில் மிளகுத்தூள், சீரகத்தூள் இரண்டையும் கலந்து கொதிக்க வைத்து இறக்கி அதனுடன் சிறிது அன்னாசிப் பூ பவுடரையும் கலந்து வடிகட்டி தேன் கலந்து அருந்தி வர, அஜீரணக் கோளாறுகளும் சுவாசக் கோளாறுகளும் நீங்கும்.
அன்னாசிப் பூ பெண்களின் மாதவிலக்கு பிரச்சினையை சரிசெய்கிறது. மேலும் இதய பாதிப்பு, வாய் துர்நாற்றம், நுரையீரல் பாதிப்பு, சளி,உயர் இரத்த அழுத்தம், குழந்தைகளுக்கு ஏற்படும் குடல் புழுக்கள் பாதிப்பு போன்றவைகளுக்கு அன்னாசிப்பூ அருமருந்தாகிறது.