ஆனால்,சமீபத்தில் வெளிவந்த "லப்பர் பந்து" படத்திற்குப் பிறகு கெத்து தினேஷ் என அழைக்கப்பட்டு வருகின்றார்.
அறிமுக இயக்குநரான தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் உருவான இப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்று வெற்றியடைந்துள்ளது.
இப்படத்தில் அட்டகத்தி தினேஷுடன் இணைந்து ஹரிஷ் கல்யாண், சஞ்சனா, சுவாசிகா, பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இந்நிலையில் 18 நாட்களை Box Office இல் கடந்துள்ள லப்பர் பந்து திரைப்படம் இதுவரை உலகளவில் ஈட்டியுள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி,இப்படம் உலகளவில் இதுவரை இந்திய மதிப்பில் ரூ. 35 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.
இது இப்படத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் வசூலாகப் பார்க்கப்படுகின்றது.