அவர்களின் பெயர்களை Royal Swedish Academy of Sciences உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
ஜோன் ஜே ஹோப்ஃபீல்ட் (John J Hopfield) மற்றும் ஜெஃப்ரி ஈ. ஹிண்டன் (Geoffrey E Hinton) ஆகியோர் இந்த விருதுகளை வென்றனர்.
Artificial Neural Networks மூலம் இயந்திர கற்றல் தொடர்பான முறையான கண்டுபிடிப்புகளை இந்த இரு விஞ்ஞானிகள் செய்துள்ளதாக இயற்பியல் குழு தெரிவித்துள்ளது.
நோபல் குழுவின் கூற்றுப்படி, இயற்பியலில் நிலையான கட்டமைப்பு முறைகள் மூலம் சக்திவாய்ந்த இயந்திர கற்றல் நுட்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஜோன் ஹோப்ஃபீல்ட் தகவல்களைச் சேமித்து வைக்கும் முறையை உருவாக்கியதாகவும், ஜெஃப்ரி ஹிண்டன் தரவுகளில் உள்ள பல்வேறு பண்புகளைப் பற்றிய ஒரு முறையை உருவாக்கியதாகவும் நோபல் குழு தெரிவித்துள்ளது.
இந்த அணுகுமுறையின் மூலம், தற்போது பயன்பாட்டில் உள்ள செயற்கை நரம்பியல் வலையமைப்பை செயல்படுத்த முடியும் என்று நோபல் குழு கூறுகிறது.
கடந்த ஆண்டு மூன்று பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இதுவரை 224 பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.