நடிகர் சூர்யா தற்பொழுது இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ‘சூர்யா 44’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
சூர்யாவின் ‘கங்குவா’ திரைப்படம் November 14 ஆம் திகதி வெளியாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' திரைப்படத்திலும் சூர்யா நடிக்கவுள்ளார்.
இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இத்திரைப்படம் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாக்கப்படவிருக்கிறது.
இந்த நிலையில், ‘வாடிவாசல்’ திரைப்படத்திற்கு முன் நடிகர் சூர்யா ஒரு புதிய திரைப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.
இயக்குநரும் நடிகருமான ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு November மாதம் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இத்திரைப்படத்திற்கு A. R. ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.
இத்திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.